உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10,000த்தை கடந்த நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 2,44,000 மேல் அதிகரித்துள்ளது. இத்தாலியில் 3,405, சீனாவில் 3,245, ஈரானில் 1,284, ஸ்பெயினில் 831 பேர் கரோனாவால் இறந்துள்ளனர். இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 206-ல் இருந்து 223 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாட்டினர் 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 49 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CoronaVirus - TNGovt - Other state vehicles banned from coming to TamilNadu

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்தியாவில் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நாளை முதல் மார்ச் 31 வரை வெளிமாநில வாகனங்கள் தமிழகத்திற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடாக, ஆந்திர மாநில எல்லைகள் மூடப்படுவதாகவும் அத்தியாவசிய பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறி, மருந்து உள்ளிட்ட வாகனங்கள் மட்டும் பரிசோதனைகளுக்கு பின் அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்களின் அத்தியாவசிய நகர்வுக்கு மட்டும் குறைந்த அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.