சீனாவில் வுஹான் மாகணத்தில் முதலில் பரவ ஆரம்பித்த கரோனா வைரஸ், இன்று 175 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 425 ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

 CoronaVirus - TNgovt - Minister M. R.Vijayabhaskar announcement

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதில் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. கரோனாவை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க அனைத்து காவல் ஆணையர்களும், ஆட்சியர்களும் முதல்-அமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கரோனாவை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க அனைத்து காவல் ஆணையர்களும், ஆட்சியர்களும் முதல்-அமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் சென்னை மாநகர பேருந்துகளை திருச்சி வரை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நாளை மாலை 6 மணி வரை பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் ஆம்னி பேருந்துகள் குறைவாக இருப்பதால் மாநகர பேருந்துகள் கூடுதல் தொலைவு இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை மாநகர பேருந்துகள் திண்டிவனம் வழியாக திருச்சி வரை இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.