CORONAVIRUS TN GOVT CHENNAI HIGH COURT

கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த அபராத தொகையை ரத்து செய்யக்கோரி ராமாபுரத்தைச் சேர்ந்த 77 வயதான முத்துக்குமரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.

Advertisment

அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'தனிநபர் விதிகளை பின்பற்றாவிட்டால் அது குற்றம் எனச் சேர்க்கப்பட்டுள்ளது. சட்டத் திருத்தத்தை ஆளுநர் மூலமாக நிறைவேற்றாமல், நிர்வாக உத்தரவாக வெளியிடப்பட்டுள்ளது. எனவே, கரோனா விதிகளை மீறும் தனிநபர், நிறுவனங்களுக்கு ரூபாய் 200 முதல் ரூபாய் 5,000 வரை அபராதம் வசூலிக்க வழிவகை செய்யும் அறிப்பாணையை ரத்துச் செய்ய வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.