Advertisment

coronavirus tn government instruction for peoples

கரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் தொடர்பான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

Advertisment

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களில் அறிகுறி இருப்பவர்களுக்குமட்டும் மருத்துவ சோதனை செய்யப்படும். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் அனைவருமே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும். தொற்று உறுதியானால் மருத்துவமனையில் அனுமதி,இல்லையெனில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். கர்ப்பிணிகள் மற்றும் 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர் மறைவுக்கு வருவோர், உடனடியாக மருத்துவமனை செல்லும் நிலையிலுள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது." இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.