Skip to main content

தமிழகம் முழுவதும் 31- ஆம் தேதி வரை நகைக்கடைகள் மூடல்!

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

 

coronavirus tamilnadu jeweller shops closed till march 31


தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மார்ச் 31 ஆம் தேதி வரை அனைத்து நகைக்கடைகளும் மூடப்படும் என்று சென்னை நகைக்கடைகள் வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜெயந்திலால் சலானி அறிவித்துள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Lok Sabha elections; Election Commission action order

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் முடிவுற்றுள்ளன. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளன. மேலும் நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று (20.03.2024) முதல் தொடங்கி உள்ளது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. 

Next Story

நகைக்கடை உரிமையாளரைத் தாக்கி நகைகள் கொள்ளை!  சிசிடிவியில் பதிவான பதைபதைப்பு காட்சிகள்!  

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
beaten the jewelry store owner and steal jewelry

நகைக் கடைக்குள் வாடிக்கையாளர்கள் போல் புகுந்து உரிமையாளரைத் தாக்கி  மிரட்டிய கொள்ளையர்கள்,  ஷோகேஸில் வைக்கப்பட்டிருந்த மொத்த  நகைகளையும் சுருட்டி ஓட்டம் பிடித்துள்ளனர்.  ஹைதராபாத்தில் உள்ள அக்பர் பாக் பகுதியில் முகமது உக் ரஹ்மான் என்பவர் கிஸ்வா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.   

14-ஆம் தேதி நண்பகலில்  முகத்தில் மாஸ்க், தலையில் ஹெல்மெட்  அணிந்தபடி,  ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர்,   வாடிக்கையாளர்களைப்  போல் ஒருவர் பின் ஒருவராக அந்தக் கடைக்குள்  நுழைந்தனர். அப்போது  முகமது உக் ரகுமானின் மகன் கடையில் இருந்தார். கத்தியைக் காட்டி அவரை மிரட்டி,  கடுமையாகத் தாக்கிய கொள்ளையர்கள்,   ஷோகேஸில் வைக்கப்பட்டிருந்த 150 கிராம் எடையுள்ள மொத்த  ஆபரணங்களையும் பெரிய பை ஒன்றில் அப்படியே அள்ளிப்போட்டுக்கொண்டு  அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.  அவர்கள் சென்றபின் கொள்ளைச் சம்பவம் குறித்து  முகமது உக் ரஹ்மானின்  மகன் தன்னுடைய தந்தைக்கு தகவல் அளித்தார்.  

முகமத் உக் ரஹ்மான்  தொலைபேசி மூலம் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த  போலீசார் வழக்கு பதிவு செய்து,  கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி  கேமராக்களில் பதிவான  காட்சிகளைக்  கைப்பற்றி,  தப்பிச் சென்ற  கொள்ளையர்கள் மூன்று பேரையும் தீவிரமாகத்  தேடி வருகின்றனர். பகல்  வேளையில் பலர் நடமாடும் பகுதியில் ஹைதராபாத்தில் இக்கொள்ளைச்  சம்பவம் நடந்துள்ளது.