Advertisment

தமிழகத்தில் இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்!

coronavirus tamilnadu complete lockdown for today

Advertisment

தமிழகம் முழுவதும் இன்று (30/08/2020) தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு, கடந்த ஜூலை மாதம் முதல் ஊரடங்கில் படிப்படியாக சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டன, இருப்பினும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த தளர்வுமின்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த காரணத்தால், ஜுலை மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்தியது தமிழக அரசு. அதன்படி, ஜூலை மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த நடைமுறையை ஆகஸ்ட் மாதத்திலும் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த வகையில் இன்று (30/08/2020) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் மருத்துவமனைகள், மருந்துக்கடைகள் தவிர அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளது. சாலைகள் அனைத்தும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

அத்தியாவசியத் தேவைகளைத் தவிர பிற தேவைகளுக்காக வெளியே வருபவர்களை கண்காணிக்க தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tamilnadu lockdown coronavirus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe