கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து தமிழக முதல்வர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழகம் முழுவதும் நாளை மாலை 06.00 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் நாளை மாலை 06.00 மணி முதல் மார்ச் 31- ஆம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசியத் துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது. எல்லைகள் மூடப்பட்டாலும் பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருள் கொண்டு செல்ல தடையில்லை. அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் இயங்க தடையில்லை. பால், காய்கறி, மளிகை, இறைச்சி போன்ற அத்தியாவசிய கடைகள் தவிர பிற கடைகள் இயங்காது.

CORONAVIRUS TAMILNADU ALL CHECK POST CLOSED CM ANNOUNCED

பேருந்துகள், டாக்சி, ஆட்டோக்கள் இயங்காது; மருந்து, அத்தியாவசிய பொருள் தயாரிப்பு ஆலை இயங்கலாம். அம்மா உணவகங்கள் வழக்கம் போல் இயங்கும்; மருந்தகங்கள், உணவகங்கள் செயல்பட அனுமதி; கரோனா பற்றிய அறிவுறுத்தலை மீறி மக்கள் வெளியே நடமாடுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அனைத்து மாவட்ட காவல் ஆணையர்களும், மாவட்ட ஆட்சியர்களும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஐ.டி ஊழியர்கள் உட்பட அனைவரும் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும். மருத்துவம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள் இயங்கும். அத்தியாவசிய கட்டடப் பணிகள் தவிர பிற கட்டடப் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

CORONAVIRUS TAMILNADU ALL CHECK POST CLOSED CM ANNOUNCED

Advertisment

நோய் தடுப்பு நடவடிக்கையால் பாதித்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி அரசு பரிசீலனை. கரோனா தடுப்புக்கு அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்." இவ்வாறு அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பால் 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் தமிழக அரசு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.