கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன, இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாகத் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாகச் சேலம் மாநகர எல்லைக்குள் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக்கடைகளை நடத்த சேலம் மாநகராட்சி தடை விதித்துள்ளது. மேலும் இறைச்சிக் கடைகளுக்குக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி மறு அறிவிப்பு வரும் வரை ஓமலூர் அரபிக்கல்லூரி அருகே மாற்று இடத்தில் இறைச்சிக்கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.