Advertisment

கரோனா- சென்னையில் 30 பேர் டிஸ்சார்ஜ்! (படங்கள்)

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருப்பினும் மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

குறிப்பாகத் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1267 ஆக அதிகரித்துள்ளது. இதில் 180 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த 30 பேர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையைச் சேர்ந்த 30 பேரையும் டீன் நாராயணபாபு மற்றும் மருத்துவர்கள் பழங்களை வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

குணமடைந்தவர்கள் கூறுகையில், "மருத்துவர்கள் நன்றாகக் கவனித்துக் கொண்டதாகவும், செவிலியர்களும், மருத்துவர்களும் கனிவுடன் நடந்துக் கொண்டதாகவும்" கூறினர்.

ஏற்கனவே திருச்சியின் நேற்று (16/04/2020) ஒரே நாளில் 32 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Recovered Chennai coronavirus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe