Advertisment

கரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்களுக்கு அரசு அறிவுறுத்தல்!

வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டாரென ஸ்டான்லி அரசு மருத்துவமனை அறிக்கைக் கொடுத்து,இறுதிச்சடங்கு முடித்த வேளையில்"இல்லையில்லை.!! கரோனா வைரஸ் தொற்றாலே அவர் இறந்தாரென "பொதுச் சுகாதாரத்துறை அறிக்கைவிட உயிர் பயத்தில் உள்ளனர் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட அந்த 300 நபர்கள்.

Advertisment

coronavirus ramanathapuram case ministry of health instruction

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை டவுன் தெற்குத்தெரு 108ம் எண்ணில் வசித்து வந்தவர் ஜமால். 71 வயதான இவர் சென்னை மண்ணடி பவளக்காரத் தெருவில் தங்கி வியாபாரம் செய்து வந்துள்ளார்.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வியாபார ரீதியாக வெளிநாட்டிற்குச் சென்று சென்னை திரும்பியவருக்கு மூச்சுத்தினறல் ஏற்பட,தொடக்கத்தில் தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்துள்ளார்கள் அவரது உறவினர்கள்.சிகிச்சை பலனளிக்காததால் அங்கிருந்து தொடர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் பெரியவர் ஜமால்.

coronavirus ramanathapuram case ministry of health instruction

Advertisment

அங்கும் சிகிச்சை பலனளிக்காமல் போக கடந்த 02/04/2020 அன்று இறந்துள்ளார் அவர்.வயது மூப்பின் காரணமாகவே ஜமால் இறந்துள்ளார் எனச் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை சான்றிதழ் தர இறுதிச்சடங்கிற்காக ஜமாலின் உடலைச் சொந்த ஊரான கீழக்கரைக்கு கொண்டு வந்துள்ளனர் உறவினர்கள். பெரிய மனிதர் என்பதால் ஊரே திரண்டு அஞ்சலி செலுத்த ஜமாலின் உடல் கீழக்கரை நடுத்தெரு ஜீம்மா பள்ளி மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

coronavirus ramanathapuram case ministry of health instruction

இந்நிலையில், கடந்த 4ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், "சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 02/04/2020 அன்று இறந்த கீழக்கரையைச் சேர்ந்த ஜமாலுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிச்செய்யப்பட்டுள்ளது.கரோனா தொற்றாலே அவர் இறந்துள்ளார்." எனப் பேட்டியளித்தார்.அன்றிரவே இறந்த ஜமால் குடும்பத்தினர் தங்கியிருந்த பகுதியினை சீல் வைத்தது மாவட்ட நிர்வாகம். மறுநாள் அப்பகுதிகளுக்குக் கிருமி நாசினி உள்ளிட்ட பொருட்களைத் தெளித்து சுகாதாரப் பாதுகாப்பினை இருமடங்காக்கியது.அத்துடன் இல்லாமல், " ஜமாலின் உறவினர்கள் 11 நபர்கள் கண்டறியப்பட்டு,அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

coronavirus ramanathapuram case ministry of health instruction

அது போக அவரது இறுதிச்சடங்கில் 50 நபர்கள் கலந்து கொண்டதாகத் தெரிகின்றது.அவர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் கோருகின்றது."என்று மாவட்ட ஆட்சியர் வீரராகவ் அறிக்கை வெளியிட்டார். "முன்பே கரோனாவால் இறந்தார் என்றால் நாங்கள் எப்படி இறுதிச்சடங்கில் கலந்து கொள்வேம்..? அது போக இறுதிச்சடங்கில் கலந்து கொண்டது 50 அல்ல..!!! 300 நபர்கள்..!அரசின் அலட்சியத்தால் முன்னுக்குப் பின் முரணான தகவலால் எங்களுக்குத் தான் மரணவேதனை" என்கின்றனர் கீழக்கரை வாசிகள். இதனால் இப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

government instruction coronavirus case Ramanathapuram district
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe