/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/radha8999.jpg)
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மட்டும் 900- க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, சென்னைக்கு கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கரோனா தடுப்பு பணிக்கு உதவ மண்டல வாரியாக 5 ஐபிஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னை வடக்கு மண்டலம்- மகேஷ்குமார் அகர்வால், சென்னை கிழக்கு மண்டலம்- ஆபாஷ் குமார், சென்னை தெற்கு மண்டலம்- அமரேஷ்பூஜாரி, சென்னை மேற்கு மண்டலம்- அபய்குமார் சிங், சென்னை புறநகர் பகுதிக்கு பவானீஸ்வரி உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)