ADVERTISEMENT

கரோனா தடுப்பு- சிவகார்த்திகேயன் ரூபாய் 25 லட்சம் நிதியுதவி!

03:29 PM Mar 31, 2020 | santhoshb@nakk…

இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 24- ஆம் தேதி நள்ளிரவு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த நிலையில், இன்று (31/03/2020) 7- வது நாளாக நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதல்வர் பழனிசாமியும் கரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியுதவி அளிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதன் தொடர்ச்சியாகச் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னணி தொழில் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள், நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் பிரதமர் நிவாரண நிதிக்கும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கும் நிதி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 25 லட்சம் வழங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT