கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்கா நடராஜர் சிவகாமசுந்தரி இருசக்கர வாகன மெக்கானிக் நலச்சங்கம் சார்பில் கரோனா தொற்று ஊரடங்கு நேரத்தில் வாழ்வாதாரத்தை இழந்து குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலையில் உள்ள சிதம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள அனைத்து இருசக்கர வாகனப்பழுது நீக்குபவர்களுக்கு மளிகைப் பொருட்கள், அரிசி, முகக் கவசம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சிதம்பரத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோபு தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் கலந்து கொண்டு ஏழ்மைநிலையில் உள்ள இருசக்கரப் பழுது சரிபார்ப்போர்களுக்குநிவாரணப் பொருட்களை வழங்கி கரோனா தொற்றிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/police2_12.jpg)
மேலும் இந்த சங்கத்தின் சார்பில் கரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள்.தூய்மைப் பணியாளர்கள், உள்ளாட்சி துறையினர் என அனைத்து துறையினருக்கும் கூலி இல்லாமல் அவர்களின் வாகனத்தை இலவசமாகப் பழுதுநீக்கி தரப்படும் என்று அறிவித்துள்ளனர்.
சிதம்பரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வைரஸ் தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் வண்டிகள் பழுது ஏற்பட்டால் அதே இடத்திலிருந்து அருள் 9443602949, சண்முகம் 9894321640, கோபு 9443538734, திலக்சுரேஷ் 9629574177, மணிமாறன் 9677443504, ஆனந்த் 9698112245, ரமேஷ் 9585043274, மாரிமுத்து 9787236266, சபரி 9443275073, நவாஸ் 8015748730 என்ற தொலைபேசி எண்களுக்கு தகவல் கொடுத்தால், அவர்களுக்கு 24 மணி நேரமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை செய்யத் தயார் நிலையில் உள்ளதாக அச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கோபு தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/police9_0.jpg)
இந்நிகழ்ச்சியில்இருசக்கர வாகன மெக்கானிக் நலச்சங்கத்தின் சிதம்பரம் நகரத் தலைவர் அருள்,துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, சிறப்புத் தலைவர் சண்முகம், செயலாளர் அசோக்மேத்தா,துணைச் செயலாளர் ரமேஷ், பொருளாளர் திலக்சுரேஷ், அமைப்பாளர் சனத்குமார் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் சிதம்பரம் பகுதியில் உள்ள இருசக்கர வாகனப்பழுது நீக்குபவர்கள் திறளாக கலந்துகொண்டனர்.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif.gif)