Advertisment

கரோனா தடுப்பு: சிறைகளிலிருந்து கைதிகள் ஜாமீனில் விடுதலை!

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கோவை சிறையில் இருந்து 136 கைதிகள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். கரோனா குறித்து வதந்தி பரப்பியதாகக் கைதாகி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைக்கப்பட்ட ஹீலர் பாஸ்கரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

Advertisment

அதேபோல் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மத்திய சிறையிலிருந்து 64 விசாரணை கைதிகளும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Advertisment

coronavirus prevention tn government

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

திருவாரூர் பெண்கள் கிளை சிறையில் இருந்து 11 பெண் கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அதேபோல் நன்னிலம் கிளை சிறையிலிருந்து 11 கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் கரோனாவால் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசு அறிவித்த 144 தடை உத்தரவு இன்று (24/03/2020) மாலை 06.00 மணி முதல் அமலுக்கு வருகிறது.

coronavirus prisons Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe