CORONAVIRUS PREVENTION TAMILNADU CHIEF MINISTER MKSTALIN DISCUSSON

Advertisment

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசிப் போடும் நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கும், இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பால், காய்கறி, மளிகைக் கடைகள் காலை 10.00 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் விட்டு மாநிலம் செல்லவும், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கும் இ- பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த இ- பாஸ் நடைமுறை நாளை (17/05/2021) முதல் அமலுக்கு வருகிறது. முழு ஊரடங்கு கண்காணிப்பு பணிகளில் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு உயர் அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.

Advertisment

அதன் தொடர்ச்சியாக, இன்று (16/05/2021) சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கரோனா தடுப்புப் பணிகள், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு பணிகள், இன்னும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா என்பது குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆலோசனையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக மருத்துவத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், தமிழக தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.