கரோனா தடுப்பு பணிக்காக சென்னை மண்டலத்திற்காக அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சிறப்புக் குழுவுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார்.ஆலோசனை கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சுகாதாரத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசித்த நிலையில், சிறப்புக் குழுவுடன் ஆலோசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.