CORONAVIRUS PREVENTION RELAXATION LOCKDOWN TN GOVT

தமிழகத்தில் மார்ச் 31- ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தமிழக அரசின் உத்தரவில், "மருத்துவர்கள், மத்திய அரசு உள்ளிட்டோரின் வழிகாட்டுதல்படி தமிழகத்தில் மார்ச் 31- ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள தளர்வுகள், கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம் தொடரும். பொது இடங்களுக்கு வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை பொதுமக்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.