Skip to main content

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம் - அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு!

Published on 14/05/2021 | Edited on 14/05/2021

 

Coronavirus Prevention Measures Review Meeting - Ministers, Legislators Participate!

 

திருச்சி மாவட்டம், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்றது. இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது.

 

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மண்ணச்சநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனம், மாநகரக் காவல்துறை ஆணையர் அருண், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் பழனிகுமார், சுகாதாரத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், “தொடர்ந்து தமிழகத்தில் முன்களப் பணியாளர்கள் இழப்பு அதிகரித்துக்கொண்டேவருகிறது. எனவே முன்களப் பணியாளர்களுக்கான பாதுகாப்பை இந்த அரசு விரைந்து உறுதி செய்திடும் என்றும், பொதுமக்களை ஊரடங்கு காலத்தில் விழிப்புணர்வு மூலம் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்வதற்கும் வீட்டைவிட்டு வெளியே வராமல் பாதுகாத்துக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளக்குறிச்சியில் 11 வட்டாட்சியர்கள் இடமாற்றம்; ஆட்சியர் அதிரடி !

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
11 tahsildar transferred in Kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் சிலர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதே சமயம் இது தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் 11 வட்டாட்சியர்களை பணியிடை மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார். சின்னசேலம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட  வட்டாட்சியர்களை மாற்றி உத்தரவிட்டுள்ளார். கள்ளச்சாராய விவகாரத்தில் முதல்வர் ஏற்கனவே இருந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இருவரையும் பணியிடை மாற்றம் செய்த நிலையில் தற்போது புதிய ஆட்சியர் 11 வட்டாட்சியர்களை மாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சாட்டை துரைமுருகன் விடுவிப்பு!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
ntk sattai Duraimurugn Release 

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல் நலக்குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர்.

இதனையொட்டி தேர்தலுக்கான பரப்புரை கடந்த 8 ஆம் தேதி (08.07.2024) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதனைத் தொடர்ந்து தேர்தலுக்கான பரப்புரை கடந்த 8 ஆம் தேதி (08.07.2024) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதற்கிடையில் நேற்று (10.07.2024) காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. இதற்கிடையே விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரையின் போது தமிழக அரசு மற்றும் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் மீது திமுகவின் தொழில்நுட்ப பிரிவு (ஐடி விங்) சார்பில் திருச்சி சைபர் கிரைம் போலீல் புகார் அளிக்கப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக சாட்டை திருமுருகன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து நெல்லை வீராணம் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் இன்று (11.07.2024) கைது செய்தனர். பின்னர் சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து சாட்டை துரைமுருகனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அனுப்ப நீதிபதி சுவாமிநாதன் மறுத்து சாட்டை துரை முருகனை விடுவித்து உத்தரவிட்டார். விடுவிக்கப்பட்ட சாட்டை துரைமுருகன், “இந்த வழக்கை ரத்து செய்ய நீதிமன்றத்தை நாடுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.