/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/e3333222 (1).jpg)
கடலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, "தமிழகத்தில் கரோனாவை தடுக்க கடுமையான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் அதிகளவு கரோனா பரிசோதனைகள் செய்வதன் காரணமாக தொற்று கட்டுக்குள் உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்திற்கும் அதிகமான காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றுள்ளன. கடலூரில் கரோனா தடுப்புக்காக 39 நடமாடும் மருத்துவக் குழுக்கள் செயல்படுகின்றன. உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் கரோனாவுக்கு ஆளாகும் நபர்கள் அச்சப்பட வேண்டாம். கடலூர் மாவட்டத்தில் பெறப்பட்ட 56,942 மனுக்களில் 38,100 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் முதல்வரின் சிறப்பு குறைதீர் திட்டம் மூலம் 9,965 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் மட்டும் மூன்று ஆண்டுகளில் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 1,114 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. சொந்தக் காலில் நிற்கும் சுய உதவிக் குழுக்களுக்கு அதிகளவில் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இ-பாஸ் இருந்தால்தான் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. மாணவர்களின் மன உளைச்சலுக்கு தீர்வு காண்பதற்காகவே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கரோனாவுக்கு மருந்தே இல்லாத நிலையில், மருத்துவர்கள் தங்களது திறமையால் நோயாளிகளைக் காப்பாற்றுகின்றனர். அரசு விழாவில் பங்கேற்கஅனைத்துக்கட்சி எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு மாவட்ட ஆட்சியர் கடிதம் அனுப்பிவிட்டார்." இவ்வாறு முதல்வர் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)