கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி நாளை (09/04/2020) காலை 11.00 மணிக்கு கரோனாவைத் தடுக்க அமைக்கப்பட்ட 12 குழுக்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் தமிழகத்தில் கரோனாவின் நிலை, தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவைகுறித்து முதல்வர் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல் கூறுகின்றன.
இந்தஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், தமிழக காவல்துறை தலைவர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.