கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநில அரசுகளும் ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm987.jpg)
இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைதொடர்பாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் தலைமைச் செயலாளர், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஊரடங்கை நீட்டிக்கப்பட்டால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு முடியும் நிலையில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)