ADVERTISEMENT

கரோனா கட்டுப்பாடு- சிறப்பு அமர்வுகள் அறிவிப்பு!

05:54 PM May 28, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா கட்டுப்பாடு காரணமாக சிறப்பு அமர்வுகளை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஜூன் 1- ஆம் தேதி முதல் ஜூன் 11- ஆம் தேதி வரை 9 நீதிபதிகள் மட்டுமே வழக்குகளை விசாரிப்பார்கள். மிக முக்கிய வழக்காக தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரிக்க மட்டுமே சிறப்பு அமர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நாட்களிலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு செயல்படும். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜூன் 1- ஆம் தேதி முதல் ஜூன் 3- ஆம் தேதி வரை, ஜூன் 4- ஆம் தேதி முதல் ஜூன் 8- ஆம் தேதி வரை, ஜூன் 9- ஆம் தேதி முதல் ஜூன் 11- ஆம் தேதி வரை தலா 7 நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பார்கள். மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜூன் 1- ஆம் தேதி முதல் ஜூன் 7- ஆம் தேதி வரை, ஜூன் 8- ஆம் தேதி முதல் ஜூன் 11- ஆம் தேதி வரை தலா 7 நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பார்கள். இரு நீதிபதிகள் கொண்ட இரண்டு அமர்வுகள், தனி நீதிபதி கொண்ட மூன்று அமர்வுகள் என்ற முறையில் வழக்கு விசாரணை நடைபெறும். ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால், அதே நீதிபதி முன்புதான் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT