கரோனா தடுப்பு பணிகளுக்காக ஆலங்குடி எம்எல்ஏ மெய்யநாதன் ரூபாய் 25 லட்சம் நிதியை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

Advertisment

கரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் தாராளமாக நிதி வழங்கலாம் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்திருந்தனர்.

CORONAVIRUS PREVENTION ALANGUDI MLA FUND RELEASED

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் பலர் நிதி உதவிகளும் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று (30/03/2020) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மெய்யநாதன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சத்தை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியிடம் வழங்கி, கரோனா கிருமி பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க மருந்துகள், கை உறைகள், முகக் கவசங்கள் வாங்கிபயன்படுத்திக் கொள்ள கடிதம் கொடுத்தார். இதே போல மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் நிதி வழங்கியுள்ளனர்.