Advertisment

தனது சொந்த நிதியில் அமைக்கப்பட்ட கரோனா விழிப்புணர்வு தற்காப்பு சுரங்க பாதையைத் திறந்து வைத்த அதிமுக பிரமுகர்!

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

Advertisment

coronavirus peoples chennai admk leader

ஊரடங்கு உத்தரவு காரணமாக, பல்வேறு தொழில்துறை நிறுவனத்தினர் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர். குறிப்பாக தினக்கூலித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிதலைவர்கள், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உணவுகளையும், தேவையான உதவிகளையும் செய்து வருகின்றன.

Advertisment

coronavirus peoples chennai admk leader

அதன் தொடர்ச்சியாக வட சென்னை அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.ராஜேஸ், வட சென்னை பகுதியில் உள்ள மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கரோனா பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். மேலும் கரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைபணியாளர்களுக்கு, வீட்டுக்கு தேவையான அனைத்து உணவுப்பொருள்களையும் வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள எழில் நகர் மக்கள் காய்கறி மார்க்கெட்டுக்கு எளிமையாக செல்வதற்கு தனது சொந்த நிதியில் அமைக்கப்பட்ட கரோனா விழிப்புணர்வு தற்காப்பு சுரங்கப்பாதையைஆர்.ராஜேஸ் திறந்துவைத்தார். இதனை அப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர்.

leaders admk Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe