/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tn govt6_0_4.jpg)
தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கானக் கட்டணத்தை நிர்ணயித்து அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கரோனா சிகிச்சை கட்டணம் நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் அல்லாத படுக்கை வசதிக்கு மருத்துவமனையின் தரத்தைப் பொறுத்து ரூபாய் 5,000 முதல் ரூபாய் 7,500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிக்கு ரூபாய் 15,000, வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய சிகிச்சைக்கு ரூபாய் 35,000, தீவிர சிகிச்சைப் பிரிவில் ஊடுருவாத வெண்டிலேட்டர் வசதிக் கொண்ட கரோனா சிகிச்சைக்கு ரூபாய் 30,000, ஆக்சிஜனுடன் கூடிய தீவிர சிகிச்சைக்கான (படிப்படியாகக் குறைப்பதற்கு மட்டும்) கட்டணம் ரூபாய் 25,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கரோனா சிகிச்சைக்கு அதிகரிக்கப்பட்ட கட்டணத் தொகையானது இரண்டு மாதங்களுக்குள் மறு பரிசீலனை செய்யப்படும். தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1800 425 3993, 104 என்ற தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)