கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலிடம் முதல்வர் பழனிசாமி நலம் விசாரித்தார்.
தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. தொற்று ஏற்பட்டதையடுத்து, சென்னையில் உள்ள அவரது அரசு குடியிருப்பிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் முதல்வர் பழனிசாமியின் ட்விட்டர் பக்கத்தில், "தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கஃபிலுக்கு கரோனா தொற்று என்ற செய்தி அறிந்ததும், அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். அவர் விரைவில் பூரண குணமடைந்து, இயல்புநிலை திரும்ப இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.