ADVERTISEMENT

எதன் அடிப்படையில் கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது? - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி!

02:50 PM Oct 15, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சித்த மருத்துவர் சுப்ரமணியன் கண்டுபிடித்த 'இம்ப்ரோ' மருந்தை பரிசோதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் புகழேந்தி, கிருபாகரன் அமர்வு முன் இன்று (15/10/2020) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'எந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் கரோனா நோயாளிக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது? கரோனா நோய் எதிர்ப்பு மருந்தைக் கண்டுபிடிக்க சித்த மருந்துகளை ஊக்குவிக்கலாமே? சித்த மருந்துகள் பற்றி எத்தனை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, எத்தனை மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன? கபசுரக் குடிநீர் தொடர்பாக எத்தனை நபர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்? எத்தனை பேர் குணமடைந்தனர்? எனச் சரமாரியாக கேள்வினர். மேலும், மத்திய அரசு விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 10- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT