coronavirus lockdown tamilnadu cm discussion with district collectors

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் புதிய தளர்வுகளை அறிவிப்பது பற்றி முதல்வர் பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் ஊரடங்கு நீட்டிப்பு, இ- பாஸ், பொது போக்குவரத்து சேவை உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஆலோசித்து வருவதாக தகவல் கூறுகின்றன.

Advertisment

இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின் மதியம் 03.00 மணிக்கு மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

Advertisment

மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களின் கருத்தை கேட்டறிந்து புதிய தளர்வுகள் பற்றி முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏழாம் கட்ட ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 31- ஆம் தேதியுடன் முடியும் நிலையில் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். கரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 24- ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment