/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CMO1_11.jpg)
தமிழகத்தில் மேலும் தளர்வுகளை அளிப்பது குறித்து வரும் அக்டோபர் 28- ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அக்டோபர் 28- ஆம் தேதி காலை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தும் முதல்வர், மாலை மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி,விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் பெரும்பாலான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தியேட்டர்கள் திறப்பு, சென்னை புறநகர் ரயில் சேவை, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஆலோசிக்க உள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)