சென்னையில் பஸ்கள் ஓடத்தொடங்கின...

coronavirus lockdown relaxation bus service tamilnadu

தமிழகத்தில் மக்களுக்கு தேவையான பெரும்பாலான தளர்வு கிடைத்ததால் ஐந்து மாதங்களுக்கு பின் இயல்புநிலை திரும்பியது.

சென்னையில் 161 நாட்களுக்கு பின் மாநகர அரசு பேருந்து சேவை மீண்டும் தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மக்கள் ஆர்வத்துடன் பேருந்துகளில் ஏறி பயணம் செய்கின்றனர்.சென்னை மாநகர பேருந்துகள் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன.

கரோனா ஊரடங்கால் பிற மாவட்டங்களிலும் தொடங்கி நிறுத்தப்பட்ட அரசு பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது. மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்துகளில் செல்ல முடியும்; ஒரு மாவட்டத்திலிருந்துஇன்னொருமாவட்டத்துக்கு பேருந்து சேவை தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

buses coronavirus lockdown Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe