Skip to main content

"ஊரடங்கு துயரத்திற்கு ஆளாகியுள்ள மக்களுக்கு அரசு உடனடியாக ரூபாய் 5,000 வழங்க வேண்டும்"- முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோரிக்கை!

Published on 09/07/2020 | Edited on 09/07/2020

 

coronavirus lockdown peoples government dmk leader request

 

தமிழக அரசின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கடலூர் மாவட்ட பத்திரிகையாளர்களுடன் கரோனா நோய்ப் பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார். 

 

அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் மந்தமாக இருப்பதால் மக்கள் மரண பயத்தில் வாழவேண்டிய சூழல் நிலவுகிறது. தொடரும் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள், தொழிலாளர் வர்க்கத்தினர், வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் வேதனைக்கு ஆளாகியுள்ளனர். 

 

இந்த நிலையில் 1,000 ரூபாய் நிவாரண நிதியையும், இலவச அரிசியையும் வைத்துக் கொண்டு குடும்பச் செலவுகள், மருத்துவச் செலவுகள் உள்ளிட்ட  மற்ற செலவுகளைச் சமாளிக்க முடியுமா? எனவே பல்வேறு வகையிலும் துயரத்திற்கு ஆளாகியுள்ள மக்களுக்கு அரசு உடனடியாக ரூபாய் 5,000 நிவாரண உதவி வழங்க வேண்டும். தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் இருந்திருந்தால் கண்டிப்பாக பத்தாயிரம் வரை கூட கொடுத்திருப்பார். 

 

வைரஸ் தாக்கத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துகிற வகையில் அனைத்து கிராம, நகர, பேரூராட்சி பகுதிகளிலும் சிகிச்சை முறையைத் தீவிரப்படுத்த வேண்டும். மக்களை நாடி மருத்துவர்கள் செல்லவேண்டும். கிராமங்கள் தோறும் முகாம்கள் நடத்த வேண்டும். அது மட்டுமின்றி நகர, பேரூர், ஊராட்சி, கிராமப் பகுதிகளில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும். அனைத்துக் கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து ஒருமனதாகச் செயல்பாட்டை நிறைவேற்ற வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் தவறவிட்டதால் தற்போது பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

 

அரசு செய்ய வேண்டியதை தி.மு.க முன்னின்று மக்களுக்குச் செய்து வழிகாட்டி வருகிறது. ஒவ்வொரு எம்.எல்.ஏ, எம்.பி நிதியும் வைரஸைக் கட்டுப்படுத்த வழங்கப்படுகிறது. இவை எந்த வகையில் செலவாகிறது என்பது தொடர்பாக தமிழக அரசு விளக்க வேண்டும் " என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு; அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் திருப்பம்

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

Judgment after approximately 5 years; A twist in the case of AIADMK leader Panchanathan

 

கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர் மற்றும் அதிமுக நிர்வாகியான பஞ்சநாதன் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடலூரில் தேவனாம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கும், சோனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாம். சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக இந்த தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சோனாங்குப்பத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார்.

 

இது குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். 21 பேர் கைது செய்யப்பட்டு 20 பேர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. விடுபட்ட நபர் வழக்கு விசாரணையின் போதே இறந்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இவ்வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

இதன்படி, கந்தன், ஆறுமுகம், சரண்ராஜ், சுரேந்தர், ஓசைமணி உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் 10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.

 

 

Next Story

திருநங்கைகளை ‘சாதி’யாக வகைப்படுத்திய அரசு; சர்ச்சையைக் கிளப்பிய சாதிவாரி கணக்கெடுப்பு

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

Bihar government classified third genders as caste code  census

 

இந்தியாவில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சில காரணங்களுக்காக நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், பீகாரில் முதல்முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. கடந்த ஜூலை மாதம் பீகாரில் இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்கப்பட்ட நிலையில், முதல்வர் நிதிஷ்குமார் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டிருந்தார். 

 

இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த கணக்கெடுப்பு முதற்கட்ட பணி ஏற்கனவே முடிவடைந்த நிலையில், அதன் இரண்டாம் கட்ட பணிகள் இந்த மாதம் 15 ஆம் தேதி தொடங்கி அடுத்த(மே) மாதம் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  அதன்படி ஒவ்வொரு சாதிக்கும் ஒரு குறிப்பிட்ட எண் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் உட்பிரிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அதனால் சாதியில் எத்தனை உட்பிரிவு இருந்தாலும், அவர்கள் அனைவரும் அந்த சாதிக்கு ஒதுக்கப்பட்ட எண்ணில்தான் கணக்கிடப்படுகிறார்கள். 

 

இந்த நிலையில் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளை சாதிவாரி கணக்கெடுப்பில் ஒரு சாதி என்று வகைப்படுத்தியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த கணக்கெடுப்பில் அவர்களுக்கு 22 என்ற எண்ணானது ஒதுக்கப்பட்டு அதற்குள் அவர்களை உள்ளடக்கியுள்ளனர். இதற்கு பீகாரில் உள்ள சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.