Skip to main content

நான்கு மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் அளித்தது மின்சார வாரியம்!

Published on 20/06/2020 | Edited on 20/06/2020


 

CORONAVIRUS LOCKDOWN FOUR DISTRICTS TNEB PAY TIME EXTEND

 

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பொதுமுடக்க பகுதிகளில் மின்கட்டணம் செலுத்த ஜூலை 15- ஆம் தேதி வரை அவகாசம் அளித்தது தமிழ்நாடு மின்சார வாரியம். 

 

செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தின் பொதுமுடக்க பகுதிகளிலும் மின்கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 15- ஆம் தேதி வரை மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டாம் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூன் 19- 30 ஆம் தேதி வரை மின் கணக்கீட்டு தேதி உள்ளவர்களுக்கு முந்தைய மாதப்படி மின்கட்டணம் செலுத்த வேண்டும். LT நுகர்வோர்களுக்கு பிப்ரவரி, LTCT நுகர்வோருக்கு மே மாத மின்கட்டணத்தை ஜூன் மாதத்திற்கு கணக்கீடு செய்யப்படும். நான்கு மாவட்டங்களில் ஜூன் 30ஆம் தேதி வரை மின்கட்டண வசூல் மையங்கள் செயல்படாது. ஆன்லைன், பேமெண்ட் கேட்வே, பி.பி.பி.எஸ். மூலம் மின்கட்டணம் செலுத்தலாம். இவ்வாறு தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கணக்கெடுக்க ஆள் இல்ல; போன மாச கரண்ட் பில்லயே கட்டிடுங்க' - அதிர்ச்சியில் கிராம மக்கள்

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

nn

 

திருவாரூரில் மின் கணக்கெடுப்பு செய்ய ஆளில்லாததால் ஜூன் மாதம் கட்டிய அதே மின்கட்டணத்தை இந்த மாதம் கட்டி விடுங்கள் என வடபாதிமங்கலம் மின் பொறியாளர் அலுவலகம் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலத்தில் உதவி மின் பொறியாளர் அலுவலகம் உள்ளது. சாத்தனூர், சித்தாம்பூர், வேல்குடி, பழையனூர் ஆகிய கிராமங்களுக்கு வடபாதிமங்கலத்தில் மின் பொறியாளர் அலுவலகம் மூலம் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இங்கு மின் பயன்பாட்டை கணக்கிடுவதற்கு ஆள் பற்றாக்குறை இருக்கிறது. இதனால் கடந்த ஆறாவது மாதம் (ஜூன்) கட்டிய மின் கட்டணத்தை இந்த மாதம் கட்டி விடுங்கள் என தினசரி பத்திரிகைகளில் வடபாதிமங்கலம் மின் பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

அந்த அறிவிப்பில், ‘மின் கணக்கீடு செய்ய ஆள் இல்லை. அதனால் ஆறாம் மாதம் கட்டணத்தை செலுத்துங்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே, ஜூன் மாதங்கள் கோடைக் காலம் என்பதாலும் பள்ளி விடுமுறைக் காலம் என்பதாலும் அதிகப்படியான மின் சாதனங்கள் இயக்கப்பட்டிருக்கும். இதனால் அதற்கான மின் கட்டணம் வந்திருக்கும். ஆனால் இப்பொழுது மின்சாரத்தின் பயன்பாடு ஓரளவு குறைந்திருக்கும். இதனால் ஆறாம் மாதத்திற்கான மின் கட்டணத்தை விட இந்த மாதம் மின் கட்டணம் கணக்கிடப்பட்டிருந்தால் குறைவாகத்தான் வந்திருக்கும். ஆனால் பழைய மின்கட்டணத்தையே கட்டச் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்வது என அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

 

Next Story

'நான் ஏன் கட்டணும்; அரசு இலவசமா தருது...' - மின் வாரிய அதிகாரிகளைத் தாக்கிய வாலிபர் 

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

bangalore viral video eb bill pending related issue 

 

கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டத்தில் குக்கன்பள்ளி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சந்திரசேகரையா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 6 மாதங்களாகத் தனது வீட்டின் மின் கட்டணத்தைச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மின்சார வாரியத்தில் இருந்து மின்துறை அதிகாரிகள் சந்திரசேகரையா வீட்டிற்கு வந்துள்ளனர். மேலும் அவர் 9 ஆயிரம் ரூபாய் அளவுக்கு வைத்துள்ள நிலுவைத் தொகையைச் செலுத்துமாறு சந்திரசேகரையாவிடம் கூறியுள்ளனர். அதற்கு அவர், நான் மின்சார கட்டணத்தைச் செலுத்தமாட்டேன். வீடுகளுக்கு மின்சாரம் இலவசம் என்று அரசு அறிவித்து விட்டது எனக் கூறி மின்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தகராறும் செய்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து அவர் மின் கட்டணத்தைச் செலுத்தாத காரணத்தினால், நேற்று மின்சாரத்துறை அதிகாரிகள் இருவர் அவரது வீட்டில் மின்சார இணைப்பைத் துண்டிக்கச் சென்றுள்ளனர். அப்போதும் அவர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு தனது காலில் இருந்த செருப்பை எடுத்து அதிகாரிகளைத் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்தவரையும் சந்திரசேகரையா தாக்க முயன்றார்.

 

இதுகுறித்து மின்துறை அதிகாரிகள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரய்யாவை கைது செய்தனர். தற்போது இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.