ADVERTISEMENT

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அளிப்பது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை!

09:24 AM Sep 08, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT


தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் செப்டம்பர் 15ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இன்று (08/09/2021) காலை 11.30 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

ADVERTISEMENT

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் (டி.ஜி.பி.), மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள், ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அளிப்பது, 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT