கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு விடுமுறையை அறிவித்துள்ளது தமிழக அரசு.

Advertisment

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பாதிப்பால் இது வரை 5,080 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கரோனா வைரஸ் இதுவரை 127 நாடுகளுக்கு பரவியுள்ளது. அதேபோல் உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 1,37,702 ஆக அதிகரித்துள்ளது.

coronavirus lks and ukg stds schools leave announced tn government

இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 76லிருந்து 81 ஆக அதிகரித்துள்ளது. 64 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவை சேர்ந்த ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கரோனா அச்சம் காரணமாக பல்வேறு மாநில அரசுகளும் பள்ளிகள், மால்கள், தியேட்டர்களை மூட உத்தரவிட்டுள்ளன.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த நிலையில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு மார்ச் 16- ஆம் தேதி முதல் மார்ச் 31- ஆம் தேதி வரை விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மார்ச் 31- ஆம் தேதி வரை விடுமுறை என்று அரசு தெரிவித்துள்ளது.