Skip to main content

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடைகளை மூட உத்தரவு!

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் மருந்தகம், மளிகை, காய்கறி கடைகள் போன்ற அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். கரோனா காரணமாகத் தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்திய மூன்று மாவட்டங்களில் காஞ்சிபுரமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 

coronavirus kanchipuram shop closed collector order

ஆட்சியர் உத்தரவையடுத்து காஞ்சிபுரத்தில் கடைகள் அடைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை தமிழகத்தில் 9 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கு உறுதி ஏற்றோம்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Let's vow to defeat the fascists  Minister Udayanidhi Stalin's

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதே போன்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் தி.மு.க. வேட்பாளார் செல்வத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு. எனவே ஏப்ரல் 17 ஆம் தேதி வரை தேர்தல் பிரச்சாரம் செய்யலாம். தி.மு.க. தொண்டர்கள் பொறுப்பேற்று பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். ஜுன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை. ஜூன் 3 ஆம் தேதி கலைஞரின் 100 ஆவது பிறந்த நாள் முடிந்து 101 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார். நாம் அவருக்கு கொடுக்க கூடிய பரிசாக 40 க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்று, நாம் கை காட்டுபவரே அடுத்த பிரதமராக வர வேண்டும்” எனப் பேசினார்.

Let's vow to defeat the fascists  Minister Udayanidhi Stalin's

முன்னதாக காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கும் முன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா இல்லத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில், “பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி இல்லத்தில் இருந்து ‘மாநில உரிமைகளை மீட்க தலைவரின் குரல்’ 2 ஆம் கட்ட நாடாளுமன்ற பிரச்சாரப் பயணத்தை துவக்குவதில் பெருமை கொள்கிறோம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் புகழ் ஓங்குக. தலைவர் தலைமையில் திராவிட மாடல் அரசு வெல்லட்டும். பாசிசம் ஒழியட்டும். BELONG TO THE DRAVIDIAN STOCK” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மாநில சுயாட்சியின் உரிமைக்குரல் நம் அண்ணாவின் மண்ணில், பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கு உறுதி ஏற்றோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

திருமணத்திற்குச் சென்று திரும்பிய நகைக்கடை அதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
The jewelry store owner who returned from the wedding was shocked

காஞ்சிபுரம் மாநகர எல்லைக்கு உட்பட்ட விளக்கடி கோயில் தெருவில் நகைக்கடை அதிபர் மகாவீர் சந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் கீழ்த் தளத்தில் நகைக்கடையும், மேல் தளத்தில் வீடும் உள்ளது. இவர் 150 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைத் தனது வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகக் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் சென்னை சென்றுள்ளார்.

இதனைத் தெரிந்துகொண்ட அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டிலிருந்த 150 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் மகாவீர் சந்த் இன்று சென்னையிலிருந்து காஞ்சிபுரத்தில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிச் சென்றுள்ளார். அப்போது தனது வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும் இது குறித்து உடனடியாக விஷ்ணு காஞ்சி காவல்நிலையத்தில் மகாவீர் சந்த் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். வீட்டைப் பூட்டிவிட்டுத் திருமண விழாவுக்கு சென்றிருந்த நிலையில், மர்ம நபர்கள் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.