Advertisment

கரோனா சிறப்பு வார்டில் உணவு சாப்பிடாமல் புறக்கணித்து போராட்டம் -அதிகாரிகள் பேச்சுவார்த்தை

coronavirus issue

Advertisment

விழுப்புரம் மாவட்டம், மயிலம் பகுதியை சேர்ந்தவர்கள் கோயம்பேட்டில் வேலை செய்துள்ளனர். அவர்கள் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதால் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அவர்களை பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று உள்ளவர்களை அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் தங்க வைத்து மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களில் பலர் தங்களுக்கு விரைவான பரிசோதனையை செய்யவில்லை எனவும், ஒரே அறையில் அதிக நபர்களை தங்க வைத்து உள்ளதாகவும் கூறி மதிய உணவை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் மயிலம் வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விழுப்புரம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் உத்தரவின்பேரில் இன்று அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் உணவு வாங்கிக் கொண்டு தங்கள் அறைகளுக்குச் சென்றனர்.

இதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள மாரனோடை திருநாவலூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் கோயம்பேட்டிலிருந்து வருகை தந்துள்ளனர். அவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏ குமாரமங்கலம் பகுதியிலுள்ள கரோனா சிறப்பு மருத்துவமனையில் தங்கவைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வரப்படுகிறது. வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களை அதே பகுதியில் உள்ள அடுத்த கட்டிடத்தில் தங்கவைத்துள்ளனர். மற்றொரு பகுதியில்தனிமைப்படுத்தட்டவர்களை தங்க வைத்துள்ளனர். இப்படி தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த தொழிலாளி ஒருவர் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதுகாப்பு பணியில் இருந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் வருவாய் துறையினர் தப்பி ஓடியவரை போலீஸ் துணையுடன் தேடி வருகின்றனர்.

villupuram issue coronavirus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe