Advertisment

தென்காசியில் இருவருக்கு கரோனா தொற்று!!

தென்காசி அருகே கரோனா தொற்றுநோய் பாதிக்கப்பட்ட நபர் வசித்து வந்த இந்திரா நகர் பகுதி முழுக்க சீல் வைக்கப்பட்டது.

Advertisment

டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டு ஊர் திரும்பியவர்கள் எனதென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.அவர்களில் தென்காசியை அடுத்த நன்னகரம் இந்திரா நகரில் வசிக்கும் ஒருவருக்கும், புளியங்குடியைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

 Coronavirus infection for two in Tenkasi

அவர்கள் இருவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் வசித்து வரும் குடியிருப்பு பகுதி முழுக்க சீல் வைக்கப்பட்டு போலீசாரின் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டது.

Advertisment

அங்குள்ளவர்கள் வெளியேறவும், வெளிநபர்கள் உள்ளே செல்லவும் போலீசார் தடை விதித்து வருகின்றனர். மேலும் அந்தப் பகுதி முழுக்க கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

case police thenkasi corona virus 144 injunction
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe