Published on 18/05/2021 | Edited on 18/05/2021

புதிய அரிசி ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிதி வழங்கப்படும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "புதிய ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரண நிதியாக ரூபாய் 2,000 வழங்கப்படும். புதிய ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு மே மாதமே முதல் தவணையாக ரூபாய் 2,000 வழங்கப்படும். தற்போது நடைமுறைக்கு வந்துள்ள 2,14,950 புதிய ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2,000 தரப்படும். புதிய ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு மொத்தம் ரூபாய் 42.99 கோடியில் கரோனா நிவாரணம் வழங்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.