தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை.

Advertisment

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

coronavirus cm palanisamy discussion with minister and officrs

தமிழகத்தில் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தங்கமணி, ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.