தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாகச் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதல்வர் பழனிசாமி, டிஜிபி திரிபாதி, தலைமைச் செயலாளர் சண்முகம், அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார். கரோனா மேலும் பரவாமல் தடுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவைச் சிறப்பாகச் செயல்படுத்துவது பற்றி ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை தர தமிழகத்தில் 4 மருத்துவமனைகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.