தமிழகத்தில் ஒருவருக்கு கரோனா உறுதியாகியுள்ள நிலையில், கரோனா தடுப்பு குறித்து முதல்வர் பழனிசாமி நாளை (09/03/2020) தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்துகிறார்.

Advertisment

coronavirus cm palanisamy calledon urgent meeting

இதனிடையே ஓமன் நாட்டில் இருந்து சென்னை திரும்பிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா உறுதியாகியுள்ள நிலையில், அந்த நபரின் குடும்பத்தினர் 19 பேரும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Advertisment

கரோனா வைரஸ் குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வி அதிகாரிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதில் அடிக்கடி கை கழுவுதல், கை குட்டையை பயன்படுத்துதல், முழுமையாக மூடும் உடை அணிதல், பொது இடத்தில் கூடுவதை தவிர்த்தல் உள்ளிட்ட சுகாதாரத்துறை அறிவுரைகளைமாணவர்களுக்கு வழங்க வேண்டும்என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.