சென்னையில் கரோனா தடுப்பு பணிக்கு சிறப்பு ஒருங்கிணைப்பாளராக நில நிர்வாக ஆணையராக பணியாற்றி வரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி பங்கஜ்குமார் பன்சாலை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் பங்கஜ்குமார் பன்சால் சிறப்பு ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் கரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு அமைச்சர்கள் குழு அமைத்த நிலையில் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.