g

திட்டக்குடி எம்.எல்.வுவும், கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான சி.வெ.கணேசன், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தனது தொகுதியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisment

அதில், ‘’உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் அதுவும் தமிழ்நாட்டையும் விட்டுவைக்கவில்லை. தினம் தினம் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் இவ்வேளையில் கொரோனாவை கட்டுபடுத்திட முடியும் என உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்கவும் தமிழக அரசு அறிவித்துள்ள உத்தரவுகளையும் நெறிமுறைகளையும் நமது தொகுதியுளுள்ள பொதுமக்களும் கழகத்தினரும் சிறப்பாக பின்பற்றி ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும்.

Advertisment

வருகின்ற 01-04-2020 வரை தேவையில்லாமல் கூட்டம் கூடுதல், அவசியமற்ற வெளியூர் பயணங்கள் ஆகியவற்றை தவிர்த்திடல், முககவசங்கள் அணிவது ஒருவொருக்கொருவர் குறைந்த பட்சம் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு பேசுவது , கைகளை அடிக்கடி கழுவுவது, வசிக்கும் இடங்களை தூய்மையாக வைத்துகொள்வது, தங்களை தாங்களே தனிமை படுத்திக்கொள்வது என கொரோனாவை கட்டுபடுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாய் ஈடுபட்டு அனைத்து தரப்பினரும், கொரோனாவை விரட்டி அடித்து அச்சத்தை தவிர்த்திட உறுதியேற்போம், வெற்றி பெறுவோம்.’’என்று தெரிவித்துள்ளார்.