Skip to main content

திருச்சியில் கரோனா நோயாளிகள் 46 பேரா? 14 பேரா? -குழப்பும் அறிவிப்புகள்

Published on 17/04/2020 | Edited on 18/04/2020


தமிழக அரசு நேற்று(17.04.2020) வெளியிட்ட அறிக்கையின்படி, கரோனா நோயினால் பாதிக்கப்பட்டோர் திருச்சியில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். திருச்சியில் உள்ள நோயாளிகளின் பட்டியல் 46 என்று பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


ஆனால் திருச்சியில், நேற்று முன்தினம்(16.07.2020) அரசு மருத்துவமனையில் கரோனாவிலிருந்து முற்றிலும் குணமாகியதால் 29 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மீதி 14 பேர் மட்டுமே திருச்சியில் கரோனா சிகிச்சையில் இருப்பதாக அறிவித்தது மாவட்ட நிர்வாகம்..

 

coronal patients in Trichy 46 0r 14


இந்த நிலையில், நேற்று வெளியான பட்டியலில் 43 பேர் இருப்பதாகச் சொல்லப்பட்டது. இன்று வெளியான பட்டியலில் புதிதாக 3 பேர் சேர்க்கப்பட்டு 46 அக உயர்ந்தது..இதனால் தமிழக அரசின் அறிவிப்பும், திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து முறையான விளக்கத்தை திருச்சி மாவட்ட நிர்வாகத்தினர் இதுவரை அளிக்கவில்லை.

இந்த அறிக்கை சொல்வது, பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் 46 பேரா ? அல்லது 14 பேரா ? என்று திருச்சி மக்களைப் பெரிய குழப்பதில் ஆழ்த்தி இருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

'எனக்கு வேண்டாம் என் தம்பிக்கு சீட்டு கொடுங்க'-துரை வைகோவை ஆதரித்து கமல் பிரச்சாரம்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
'I don't want; to give seat to my brother' - Kamal campaign in support of Durai Vaiko

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில் திருச்சியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், '' இந்தியாவில் எந்த இடத்தில் மத கலவரம் நடந்தாலும் தமிழ்நாட்டில் மிகக் குறைவு. அதுவும் திருச்சியில் இல்லை என்று சொன்னால் மிகை ஆகாது. நல்ல அரசு, நல்ல தலைமையின் அடையாளம் அது. அது தொடர வேண்டும் என்பதற்காக இங்கே வந்திருக்கிறேன்.

நான் மதிக்கும் மிக முக்கியமான புத்தகம் 'இந்திய அரசியலமைப்புச் சட்டம்' அந்த புத்தகம் பாதுகாக்கப்பட்டால் தான் நீங்கள் வணங்கும் மற்ற புத்தகங்கள் எல்லாம் பாதுகாக்கப்படும். எந்த புத்தகமாக இருந்தாலும் சரி. நான் மதம் சார்ந்த புத்தகங்களைப் பற்றி சொல்லவில்லை. அதை எழுதக்கூடாது, இதை படிக்கக்கூடாது என்று சொல்லும் பன்முகத்தன்மை, விரிந்த நோக்கம் இல்லாத எந்த அரசும் ஆபத்தானது. அவை குடியுரிமைச் சட்டங்கள் மற்றும் அரசியல் சட்டங்களின் மீது கை வைக்க தொடங்கும். அதைப்பற்றி விமர்சிக்க வேண்டியது என் கடமை. ஐந்தாண்டுக்கு ஒரு முறை அந்த கடமையை நீங்கள் செய்து கொண்டே இருந்தால்தான் நாடு நலமாக இருக்கும். நான் இங்கு சீட்டுக்காக வரவில்லை நாட்டுக்காக வந்திருக்கிறேன். எனக்கு ஒரு சீட்டு சின்ன பிள்ளையிலிருந்து கொடுத்து வைத்திருக்கிறீர்கள், இப்போது என் தம்பிக்கு சீட்டு கொடுங்க என கேட்கிறேன்.  '' என்றார்.