amit sha

Advertisment

நாடு முழுவதும் கரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களானதூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள்ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.

தனக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக உள்துறை அமைச்சர்அமித் ஷா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.கரோனாஉறுதியானதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அண்மையில்தன்னை சந்தித்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் படியும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 'I pray Amit Shah recovers soon' -Kusboo tweeted

Advertisment

கரோனாலிருந்து அமித்ஷா விரைந்து குணமடைய விரும்புவதாகவும், இறைவனைபிரார்த்திப்பதாகவும்காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் புதிய கொள்கை குறித்து அவர் பதிவிட்டு இருந்த ட்விட்டர் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.