Advertisment

கரோனா பணி... கலெக்டர்களிடம் கேள்வி கேட்டு மனு தரும் தி.மு.க. மா.செ-க்கள்!

Corona work ... DMK queries to collectors

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துவிட்டது. நகரங்களில் மட்டுமே இருந்த கரோனா நோயாளிகள் தற்போது கிராமங்களிலும் இருக்கிறார்கள்.

Advertisment

தினமும் நடத்தப்படும் பரிசோதனைகள் எவ்வளவு?கரோனா நோயாளிகளுக்கு என்னன்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளது, பரவலைத் தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பலமுறை கேள்வி எழுப்பி வரும் நிலையில், தி.மு.க. தலைமை ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும், தங்களது மாவட்ட நிர்வாகத்திடம் கேள்விகளை எழுப்புங்கள் என 32 கேள்விகள் கொண்ட பட்டியலை அனுப்பியுள்ளது.

Advertisment

அந்தப் பட்டியலில் உள்ள கேள்விகள்...

மாவட்டத்தில் தற்போது கரோனா பெருந்தொற்றைப் பரிசோதிக்கும் மையம் எவ்வளவு?

பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைகள்?

நோய்த் தொற்று ஒரு நாளிற்கு எத்தனை நபர்களுக்குப்பரிசோதிக்கப்படுகிறது?

பரிசோதனைகள் நடைபெறும் நேரம்? பணியல் உள்ள மருத்துவர்கள் எண்ணிக்கை?

செவிலியர்களின் எண்ணிக்கை?

சுகாதாரப் பணியாளர்களின் விவரம்?

பாதிப்படைந்தவர்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்படுகிறதா?

பி.சி.ஆர் டெஸ்ட் கருவி நமது மாவட்டத்திற்கு எவ்வளவு கொடுக்கப்படுகிறது?

நமது மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை / பரிசோதனை மையங்களுக்குத் தரப்படுகிறது, அதன் விவரம்?

நமது மாவட்டத்திற்கு நாள் ஒன்றுக்கு பி.பி.இ. எவ்வளவு தரப்படுகிறது?

பி.பி.இ. நமது மாவட்டத்தில் உள்ள எத்தனை மருத்துவமனை / பரிசோதனை மையத்திற்குத் தரப்படுகிறது? அதன் விவரம்?

எத்தனை மருத்துவமனையில், எத்தனை படுக்கைகள் என்ற விவரம்?

மருத்துவமனை தவிர வேறு எந்தந்த பகுதிகளில் நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன?

நமது மாவட்டத்தில் வென்டிலேட்டர் எவ்வளவு உள்ளது? அது எந்தந்த மருத்துவமனை கொடுக்கப்பட்டுள்ளது?

எத்தனை நோயாளிகள் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளனர்?

கரோனா தொற்றால் இறந்தவர்களை நமது மாவட்டத்தில், எந்தந்த பகுதியில் புதைக்கப்படுகிறார்கள்?

போன்ற கேள்விகள் அதில் உள்ளன. இந்தக் கேள்விகளை மனுவாகத் தயார் செய்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி கேள்வி எழுப்பி அந்த மனுவை தி.மு.க. எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் மாவட்ட ஆட்சியர்களை நேரில் சந்தித்து தந்துவருகின்றனர். இந்த மனுவுக்குத்தரும் பதிலை வைத்து அடுத்த கட்டமாக தி.மு.க. கேள்வி எழுப்ப தயாராகி வருகிறது.

corona virus District Collector Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe