நாடு முழுவதும்கரோனாதடுப்பு நடவடிக்கை காரணமாக பின்பற்றப்பட்டு வரும் ஊரடங்கு உத்தரவு மே 17ஆம் தேதி வரைநீடிக்கும் என மத்திய அரசு உத்தரவுபிறப்பித்துள்ள நிலையில்,ஊரடங்கை மே17 ஆம் தேதி வரை நீட்டிக்க தமிழகஅமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நேற்றுபுதிய உச்சமாகஇதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் ஒரே நாளில் 203பேருக்கு கரோனாஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,526 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றி வந்தஉளவுத்துறைகாவலர்கள் இவருக்கு கரோனாஉறுதியாகியுள்ளது.அதேபோல்புதுப்பேட்டை ஆயுதப்படை பெண் காவலர், ஓட்டேரி காவல் நிலைய காவலருக்கும்கரோனா டஉறுதி செய்யப்பட்டுள்ளது. காவலர்கள் அனைவரும் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.