சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா தொற்றுக்கான தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று உள்ளவர்கள் மற்றும் தொற்று ஆய்வுக்கு உட்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புவனகிரி அருகே தலைக்குளம் பகுதியைச் சேர்ந்த 33 வயது இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.
அவரது இரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் முடிவு வரவில்லை. இந்த நிலையில் அவர் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். அவரது உடலை உறவினர்களுடன் ஒப்படைத்து உடனடியாக இறுதி சடங்கு செய்ய காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.