Advertisment

கரோனா பணி போலீசாருக்கு 5 நாள் விடுமுறை! எஸ்.பி. சக்திவேல் உத்தரவு

கரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு ஐந்து நாள் விடுமுறை அளித்து எஸ்பி சக்திவேல் உத்தர விட்டுள்ளார்.

Advertisment

தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அனைத்த மாவட்டங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கங்கே கடைகள் அடைக்கப்பட்டு உள்ள நிலையில் டீ, காபி கூட இன்றி வீட்டிலிருந்து தண்ணீர் உணவு கொண்டு வந்து விட்டு தங்கள் பணியை போலீசார் கவனிக்கின்றனர்.

Advertisment

dindigul

ஆனால் மற்ற மாவட்டங்களில் போலீசாருக்கு மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி வழங்கப்படும் நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் தொடர் கரோனா பணியில் போலீசார் இருந்து வருவதை கண்ட எஸ்.பி. சக்திவேல் உடனே அந்த பாதுகாப்பு பணியில் இருந்து வரும் போலீசாருக்கு விடுப்பு கொடுக்க முடிவு செய்தார்.

அதன்படி 10 போலீசார் உள்ள காவல் நிலையங்களில் 3 பேருக்கு 5 நாள் விடுப்பு கொடுத்துள்ளார் .அதுபோல் 15 போலீசார் உள்ள காவல் நிலையத்தில் 4 போலீசாருக்கும், 20 பேர் உள்ள காவல் நிலையங்களில் ஆறு போலீசாருக்கும் ஐந்து நாட்கள் என மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்கள் இருக்கும் போலீசாருக்கும் எஸ்.பி. சக்திவேல் விடுமுறை கொடுத்துள்ளார்.

ே

அதுபோல் விடுமுறையில் செல்லும் போலீசார் மீண்டும் பணிக்கு வரும்போது அரசு டாக்டரிடம் மருத்துவ விடுப்புக்கான சான்றிதழ் பெற்று வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இதுவரை கரோனா வைரஸ் பாதுகாப்புக்காக பணிபுரிந்து வந்த போலீசாருக்கு இந்த விடுமுறை சற்று நிம்மதியை கொடுத்துள்ளது. அதுபோல் விடுமுறை கொடுத்த எஸ்பி சக்திவேலையும் போலீஸார் பாராட்டி வருகிறார்கள்.

corona virus dindugal police work
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe