தமிழக அரசின் கட்டுப்பாடுகள் என்னென்ன? - அரசாணை வெளியீடு!

இந்தியாவில் கரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 433 ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் நாளை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Corona Virus - TNgovt

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதையடுத்து "கடந்த 16ஆம் தேதிக்கு முன் திட்டமிடப்பட்ட திருமணங்கள் மட்டுமே, மண்டபங்களில் நடக்க வேண்டும் . திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 30 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். மருந்து உற்பத்தி, விநியோகம், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படும். ஆம்புலன்ஸ், விமான நிலையம், மருத்துவமனை செல்லும் டாக்சி, இறுதிச்சடங்கு வாகனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். அனைத்து கல்லூரி, வேலைய்வாய்ப்புத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன.

காய்கறிகள், உணவுப்பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் கிடங்குகள் செயல்படஅனுமதி. ஊழியர்களை அலுவலகம்/ வீட்டுக்கு அழைத்துச்செல்லும் பொதுபோக்குவரத்து வாகனங்கள் இயங்க அனுமதி. அத்தியாவசிய சேவைகள், அரசுப் பணிகளுக்கு மட்டும் அரசு வாகனங்களை பயன்படுத்த அனுமதி. கால்நடை தீவன விற்பனை நிலையங்கள், பால் பூத்துகள், வங்கி ஏடிஎம்கள், ஊடக அலுவலகங்கள் செயல்படும். உணவகங்கள், உணவு தயாரிப்புக் கூடங்கள், பார்சல் வழங்க அனுமதி; ஆனால் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. உணவுகளை டோர் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் செயல்படத்தடை. டீ விற்பனை நிலையங்களில் பொதுமக்கள் கூட்டமாகக் கூட அனுமதியில்லை. பெட்ரோல், கேஸ் ஏஜென்சிகள் செயல்படவும், பெட்ரோலிய பொருட்கள் போக்குவரத்திற்கும் அனுமதி" உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு விதித்த இந்த கட்டுப்பாடுகள் நாளை மாலை 6 மணி முதல் ஏப்.1 வரை அமலில் இருக்கும் என அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.

corona virus tngovt
இதையும் படியுங்கள்
Subscribe